கன்னி தை மாத ராசி பலன் 2023!

குடும்பத்தின் எதிரிகள் ஓடி ஒளிந்து போவார்கள். 6 ஆம் இடத்தில் இருந்து சனி பகவான் லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

சமூகத்தில் மதிப்பு உயரும் மாதமாக தை மாதம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படுவீர்கள். செய்யும் செயலை தெளிவான சிந்தனையுடன் செய்து முடிப்பீர்கள். கூடா நட்பினை சரியாகக் கையாளுதல் வேண்டும்.

தொழில்ரீதியாக வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகமாக இருக்கும், ஆனால் பணப் புழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். புதன் 4 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆவதால் வளர்ச்சிக்கு உண்டான வாய்ப்பு அமையும்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக வாங்க நினைத்தப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புது வேலை, பதவி உயர்வு, இட மாற்றம் என நீங்கள் நினைத்த விஷயங்கள் ஈடேறும்.

ஏற்றம் நிறைந்த மாதமாக தை மாதம் இருக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல் உங்கள் வாழ்க்கையில் செழுமையினைக் காண்பீர்கள். திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்தது போல் வரன் அமையப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.