கன்னி தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

ராகு பகவான் மேஷ ராசியில் இட அமர்வு செய்துள்ளார், கன்னி ராசியினைப் பொறுத்தவரை குரு பகவான் 8 ஆம் இடத்திற்குச் செல்வதால் உழைப்பைக் காட்டிலும் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும், வேலைவாய்ப்புரீதியாக ஏற்றங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொழில்ரீதியாக பெரிய அளவில் முதலீடு செய்யும்போது ஒருமுறைக்குப் பலமுறைக்கு யோசித்துச் செயல்படுதல் வேண்டும்.

வெளிநாடு செல்ல நினைத்தோருக்கு ஏற்ற காலகட்டமாக இருக்கும், உடல் நலன் ரீதியாக உயர் மருத்துவச் சிகிச்சையினை மேற்கொள்வீர்கள். பணவரவு சிறப்பாக இருந்தாலும், விரயச் செலவு அதிகரிக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை அலைச்சல் ஏற்படும்.

இடமாற்றங்கள் அடிக்கடி ஏற்படும். குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டிய காலகட்டமாக இந்தக் குரு பெயர்ச்சி காலகட்டம் இருக்கும். மனம் தடுமாற்றம் நிறைந்து காணப்படும், குழந்தைகள்மீது உங்களின் கவனத்தினைச் செலுத்துங்கள்.

குடும்ப உறுப்பினர்கள் ரீதியான பொறுப்புகள் அதிகரிக்கும்;  உடன் பிறப்புகளால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.