கன்னி: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

கன்னி சுபகிருது வருட பலன்கள்

இனிமையாகப் பேசி காரியம் சாதிக்கும் கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த வருடம் சுமாரான வருடமாக இருக்கும்.

உடல் நிலையினைப் பொறுத்தவரை பெரிதளவில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை, ஏற்கனவே உடல் பிணியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதில் இருந்து விடுதலை கிடைக்கும்.

பண வரவினைப் பொறுத்தவரை பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும், தேவையில்லாத காரியத்தில் இறங்கி பணத்தினை விரயமாக்காமல் இருப்பது நல்லது.

யாருக்காகவும் ஜாமீன் கொடுக்கவோ, கடன் கொடுக்கவோ வேண்டாம், நிச்சயம் அது பிரச்சினையில் கொண்டு போய் விடும். மனோபலம் வாய்ந்த நீங்கள் இந்த ஆண்டு புத்திக் கூர்மையுடன் செயல்பட்டு வேலைவாய்ப்பு ரீதியாக அடுத்த கட்டத்திற்குச் செல்வீர்கள்.

சகோதர, சகோதரிகளால் நன்மைகள் நடைபெறும். தாயாரின் உடல்நலனில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வீட்டின் சில்லறை வேலைகள் செய்யலாம், ஆனால் புதிதாகவே வீடு வாங்கவோ விற்கவோ வேண்டாம்.

வண்டி, வாகனங்கள் வாங்க நினைப்போர் தயங்காமல் வாங்கலாம். குல தெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வருதல் வேண்டும். குழந்தைகளின் கல்வியில் மிகச் சிறப்பான முன்னேற்றம் உண்டு.  வாங்கிய பல ஆண்டு கடனை திருப்பிச் செலுத்துவீர்கள்.

திருமண ஆகாதவர்களுக்கு நிச்சயம் இந்த ஆண்டு திருமணமாகும். மேலும் கணவன்- மனைவி இடையேயான பிரச்சினை சரியாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.