கன்னி செப்டம்பர் மாத ராசி பலன் 2018!

அன்புள்ள கன்னி ராசியினர்களே, இந்த செப்டம்பர் மாதம் நீண்ட நாள் கனவு நனவாகும் மாதமாக இருக்கும். சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் குருவுடன் இணைந்து இரண்டாம் இடத்தில் இருப்பதால் மங்கள நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும்.

உங்கள் ராசிக்கு குரு 2-ம் வீட்டில் தொடர்வதால் அனுபவ பூர்வமாக பேசி பல காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி மேலோங்கும்.

உங்கள் விரயாதிபதி சூரியன் 12-ம் இடத்தில் சொந்த வீடான சிம்மம் ராசியில் ஆட்சி பெறுவதால் எந்த காரியம் தொடங்குவதற்கு முன்பும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட வேண்டும். புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

செப்டம்பர் 6-ம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் சிறப்பான பலன்களை எதுவும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் ராசிக்கு 3,8-ம் இடங்களின் அதிபதியான செவ்வாய் வக்ர நிவர்த்தியாகி உச்சம் பெரும் பொழுது இடமாற்றம், சொத்து பிரச்சனை, உடன்பிறப்புகள் உங்களை விட்டு செல்ல நேரிடும். பணவரவு சீராக இருந்தாலும் கடன் சுமை கூடிக்கொண்டே செல்லும். சனி வக்ர நிவர்த்தியாகி 4ம் வீட்டில் பலம் பெறுவதால் பணிச்சுமை அதிகரிக்கும். வாகனத்தை இயக்கம் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

சிம்ம ராசியில் புதன் சஞ்சரிக்கும் பொழுது விரயங்கள் மேலோங்கும். செப்டம்பர் 3-ம் தேதி புதன் அஸ்தமனம் அடைவதால் வீண் வம்புகள், பிரச்சனைகளில் சிக்காமல் இருப்பதே புத்திசாலித்தனம். செப்டம்பர் 15-ம் தேதி கன்னி ராசியில் புதன் சஞ்சரிக்கும் பொழுது அதிக அளவில் நன்மைகள் நடைபெறக்கூடும். புதுமையான யுத்திகளை பயன்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment