கன்னி புரட்டாசி மாத ராசி பலன் 2022!

புதன் பகவான் புரட்டாசி மாதத்தின் இரண்டாம் 15 நாட்கள் கன்னி இராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார். புதன் பகவானின் ஆதிக்கத்தால் புரட்டாசி 15 ஆம் தேதிக்கும் பின் உங்களுக்குப் பொற்காலமாக இருக்கும்.

போராடி ஜெயிக்க வேண்டிய பல விஷயங்களையும் எளிதில் வெற்றி கொள்வீர்கள். தொழில் மற்றும் வேலைவாய்ப்புரீதியாக பல திருப்பு முனைகள் ஏற்பட்டு வெற்றியினை நோக்கி பயணிப்பீர்கள்.

11 ஆம் இடத்தின்மீது குரு பகவானின் பார்வை விழுவதால் பணம் பலவகைகளும் கொட்டும். தொட்டதது போக தொடாததும் துலங்கும்.

2 ஆம் இடத்தில் கேது சனி பகவானின் பார்வையில் இருப்பதால் குடும்ப உறவுகளுக்குள் சண்டை சச்சரவு அதிகம் ஏற்படும். விருந்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

உடல் ஆரோக்கியம் ரீதியாக கூடுதல் கவனம் தேவை, மருத்துவ ரீதியாக செலவுகள் ஓரளவு ஏற்படும். சிறிய முயற்சிகளும் இமாலய வெற்றிக்கு இட்டுச் செல்லும், தாய் தாய் வழி சொந்தங்களால் உதவிகள் கிடைக்கப் பெறும்.

வண்டி, வாகனங்கள் ரீதியாக லாபங்கள் கிட்டும், பூர்விகச் சொத்துகள்ரீதியாக சாதகமான முடிவுகள் எட்டப் பெறும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து இருப்போருக்கு நற் செய்தி கிடைக்கப் பெறும், திருமண காரியங்கள் கைகூடும் காலமாக இருக்கும்.

இரவு நேரங்களில் வண்டி, வாகனப் பயணங்களைத் தவிர்த்தல் நல்லது. சந்திராஷ்டம நாட்களில் வரவுள்ள பிரச்சினைகளை புன்னகையால் எதிர்கொள்ளுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.