கன்னி அக்டோபர் மாத ராசி பலன் 2022!

1 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டம் ஆதாயம் தரும் காலகட்டமாகும். வேலைவாய்ப்புரீதியாக தன்னம்பிக்கை அதிகரிக்கும், புதிதாக வேலை தேடுபவர்கள் தைரியத்துடன் வேலை தேடலில் களம் இறங்குவார்கள்.

தொழில்ரீதியாக ஏற்கனவே இருந்த மோசமான சூழ்நிலைகள் சரியாகி நஷ்டம் குறைந்து லாபம் இருக்கும் காலகட்டமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை 2 ஆம் இடத்தில் உள்ள கேதுவால் பிரச்சினைகள் ஏற்படும்.

வெளிப்படைத் தன்மை இல்லாமை, எதிர்பார்ப்பு நிறைவேறாமை என மனம் சார்ந்து சோகமாக இருப்பீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படாத வகையில் பொறுமையாகச் செயல்படுதல்மூலம் உறவுகளுக்குள்ளான பிளவினைத் தவிர்க்க முடியும்.

திருமண சார்ந்த விஷயங்களில் தடைகள் ஏற்படும், குழப்பான மனநிலை இருக்கும். மாணவர்கள் கல்வி சார்ந்த விஷயங்களில் மந்தமாகவே இருப்பர். பெற்றோரின் உடல் நலன் சிறப்பானதாக இருக்கும்.

சிறு உடல் நலத் தொந்தரவுகள் இருந்தாலும் பெரிய அளவிலான கஷ்டத்தினைக் கொடுக்காது. வெளிநாடு, வெளியூர் வேலைகளுக்குச் செல்ல முயற்சிப்போருக்கு கனவு கைகூடும் காலமாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.