கன்னி மே மாத ராசி பலன் 2023!

கன்னி ராசியினைப் பொறுத்தவரை மே மாதத்தில் குரு- ராகு-சூர்யன்- புதன் என நான்கு கிரகங்களும் 8 ஆம் இடத்தில் உள்ளது. சனி பகவான் 6 ஆம் இடத்தில் உள்ளார். புதன் வக்கிரநிலையில் உள்ளார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது. புது வேலைக்கு முயற்சிப்போர் கிடைக்கும் வேலையினை ஏற்றுக் கொள்ளுங்கள்.

தொழில்ரீதியாக புதுத் தொழில், அபிவிருத்தி போன்ற விஷயங்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். பொருளாதாரரீதியாக பெரிய அளவில் பணப் புழக்கம் இருக்காது; ஆனால் குடும்ப உறுப்பினர்கள்ரீதியாக அதிக அளவில் விரயச் செலவுகள் ஏற்படும்.

பெரிய அளவில் கடன்களை வாங்குவீர்கள்; ஆனால் முடிந்தளவு விரயச் செலவுகளை சுபச் செலவுகளாக செய்ய முயற்சியுங்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை; மருத்துவரீதியாக உயர் சிகிச்சை மேற்கொள்வீர்கள்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

திருமண காரியங்களைப் பொறுத்தவரை கைகூடி வந்த திருமணங்களும் தள்ளிப் போகும். எதிர்பார்த்ததுபோல் வரன் பெரிய அளவில் அமையாது. குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே உறவினர்களால் பெரும் பிரச்சினைகள் ஏற்படும், பொறுமையுடன் செயல்படாவிட்டால் பிரிவு ஏற்பட வாய்ப்புண்டு.

மாணவர்களைப் பொறுத்தவரை குழப்ப மனநிலையுடன் காணப்படுவர். மேலும் படிப்பில் மந்தநிலை நிலவும். உயர்கல்வி சார்ந்து எடுக்கும் முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை ஆலோசித்து, முன் அனுபவம் உள்ளவர்களிடம் கலந்து பேசி முடிவு எடுங்கள்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மிகவும் அதிருப்தியுடன் காணப்படுவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews