கன்னி மார்ச் மாத ராசி பலன் 2023!

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை போட்டிகள் நிறைந்ததாக இருக்கும், சக பணியாளர்களுடனான நட்பு நிலை மாறக் கூடும். தொழில்ரீதியாக தொழில் கூட்டாளர்களுடன் போட்டிகள் நிறைந்த, பிரச்சினைகள் கொண்ட மாதமாக இருக்கும், பணவரவு ரீதியாகவும் மிகவும் சிக்கலான மாதமாக இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடங்கல்கள் நிறைந்ததாக இருக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கேது பகவான் 2 ஆம் இடத்தில் இருப்பதால் கணவன்- மனைவி இடையே தேவையில்லாத பேச்சுகளால் பிரிவு ஏற்படும்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் வயிறு சார்ந்த உபாதைகள், ஜீரண மண்டலப் பிரச்சினைகள் ஏற்படும். பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தாமல் சிறிய செலவோடு சரியாகிவிடும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக சிறப்பாகத் தயார் ஆவார்கள். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை அத்தியாவசியத் தேவைகள் நிறைவேறும் மாதமாக இருக்கும்.

தங்க ஆபரணங்கள் ரீதியாக சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பணவரவு சிறப்பாக இருந்தாலும் சுப காரியங்கள் ரீதியாக செலவினங்கள் ஏற்படும். வண்டி, வாகனங்களைப் புதுப்பிக்கும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews