கன்னி பிப்ரவரி மாத ராசி பலன் 2023!

குருவின் பார்வை உங்கள்மேல் விழுகின்றது. வேலைவாய்ப்புரீதியாக இருந்த தடைகள் நீங்கும், வாய்ப்புகள் உங்களைத் தேடியும் வரும்; நீங்கள் தேடிச் செல்லும் வாய்ப்புகளும் அமையப் பெறும்.

தொழில்ரீதியாக புது முயற்சிகள் செய்வது வெற்றியினைக் கொடுக்கும். புதன் ஆதிக்கம் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டே சிறப்பான ஆண்டாக இருக்கும்.

சந்தோஷமான மாற்றங்கள் உங்களுக்குக் கிடைக்கப் பெறும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். உடல் ஆரோக்கியம்ரீதியாக நோய்கள் குறையும், இதுவரை செய்துவந்த மருத்துவச் செலவுகளுக்குத் தீர்வு கிடைக்கும் காலமாக இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் கைகூடும்; திருமண காரியங்கள் விறுவிறுவென நடந்தேறும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கும். அன்பு அதிகரிக்கும்.

பிரிந்த கணவன்- மனைவி ஒன்று சேர்வர், காதலர்கள் காதலை வீட்டில் சொன்னால் பெற்றோர் ஏற்றுக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். மாணவர்களுக்கு கல்விரீதியாக மேற்படிப்புக்குச் செலவுகள் ஏற்படும், உங்கள் குணநலனில் நேர்மறையான மாற்றங்கள் நடக்கும்.

பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வர். உடன் பிறப்புகளுடனான மனக் கசப்புகள் சரியாகும். பூர்விகச் சொத்துகள்ரீதியான பிரச்சினைகள் சமரசமாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews