கன்னி டிசம்பர் மாத ராசி பலன் 2022!

கன்னி ராசியினைப் பொறுத்தவரை புதன்-சுக்கிரன் இணைந்து குரு பார்வையில் உள்ளது. மீனத்தில் குருவின் பார்வை உள்ளது. 5 ஆம் இடத்தில் சனி பகவான் உள்ளது. 9 ஆம் இடத்தில் செவ்வாய் வக்ர நிலையில் உள்ளது.

சூர்யன் 3 ஆம் இடத்தில் உள்ளது. டிசம்பர் 16 ஆம் தேதி வரையிலான காலம் வரை சிறப்பான காலமாக இருக்கும். வேலைவாய்ப்புரீதியாக புது வேலை தேடுபவர்களுக்கு உகந்த காலமாக இருக்கும்.

தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்வோருக்கும் சரி, புதிதாகத் தொழில் துவங்குவோருக்கும் சரி ஏற்ற காலமாக டிசம்பர் மாதம் இருக்கும். வண்டி, வாகனங்கள் வாங்கும் காலமாக இருக்கும், வீட்டினை புதுப்பிக்க செய்யவோ, அல்லது புதிதாக வீடு வாங்கும் முயற்சியிலோ களம் இறங்குவீர்கள்.

2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் எதையும் சொல்லிவிட்டு செய்வதைவிட சொல்லாமல் செய்தால் வெற்றி உங்களுடையதே. 8 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் நல்லவர்கள், கெட்டவர்களை உங்களால் பிரித்துக் கண்டறிய முடியாது.

தேவையில்லாத விஷயங்கள் குறித்து நெருக்கம் இல்லாத மூன்றாம் நபர்களிடம் பேசுவதைத் தவிர்க்கவும். திருமண காரியங்கள் செய்ய நினைப்போருக்கு எதிர்பார்த்த வரன் அமையப் பெறும்.

புதன்- சுக்கிரன் 4 ஆம் இடத்தில் இருப்பது சுப ஸ்தானத்தையே குறிப்பதால் நேர்மறையான ஆதாயப் பலன்களைக் கொடுக்கும். கணவன்- மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.