கன்னி அதிசார கும்ப சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

உங்களுக்கு இந்த வருடத்தில் சனி பகவான் மிக அதிகமான நன்மையை வாரி வழங்கும் ஆறாம் இடத்திற்கு வருகிறார். இதன் மூலமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்து வந்த தொழில் வளர்ச்சி வேகம் எடுக்கும்.

அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் இந்த வருடம் முடிவதற்குள் அரசு பணியில் சேர்ந்து விடுவார்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு முயற்சி செய்பவர்கள் முதல் மூன்று மாதங்களுக்குள் வேலையில் சேர்ந்து விடுவார்கள்.

பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் வழக்கத்தை விட மிகச் சிறப்பான தேர்ச்சியை அடைவார்கள்.

கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த மன கசப்புக்கள் நீங்க ஆரம்பிக்கும்.

படிப்பை முடித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் அவர்கள் எதிர்பார்த்த வேலையை இந்த வருடத்தில் பெற்று விடுவார்கள் .

தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு முறையான பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு மற்றும் அனுபவத்துக்குரிய மரியாதையும் புகழும் தேடிவரும்.

ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் உங்கள் தெருவில் உள்ள விநாயகருக்கு அபிஷேகப் பொருட்கள் வாங்கித் தாருங்கள் அல்லது தினமும் ஒரு முறை விநாயகர் அகவல் பாடி வரவும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று அருகில் உள்ள காளி / மாரி / துர்க்கை / செல்லியம்மன் / பொன்னியம்மன் போன்ற உக்கிரமான பெண் தெய்வம் கோயிலுக்கு சென்று வாருங்கள்.

இந்த வருடம் முழுவதும் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது அவசியம். ரொக்க சேமிப்பை அதிகப்படுத்துவதன் மூலமாக இந்த வருடம் அமைதியான நிம்மதியான வாழ்க்கையை வழங்கும்.

சிவ ராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
+919629439499
ராஜபாளையம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.