கன்னி ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

கன்னி ராசியினைப் பொறுத்தவரை புதன், குரு, சூர்யன், சுக்கிரன் என அனைத்துக் கிரகங்களும் 8 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளது. வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது, மனதளவில் உங்களின் ஆசைக்கு ஒரு கேட் போட்டு மூடிவிடவும்.

பெரிதளவில் எந்தவொரு முயற்சியினையும் செய்யாமல் இருத்தல் நல்லது; மேலும் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்ய முடியாமல் போகும் வகையிலான தொந்தரவுகள் ஏற்படும்.

கோபம், எதிர்பார்ப்புகள், ஆசைகள் போன்றவற்றினைக் குறைத்துக் கொள்ளுதல் நல்லது. திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன் பார்ப்பதை தற்போதைக்கு ஒத்தி வைத்தல் நல்லது.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை சிறு சிறு தேவையில்லாத பேச்சுகளும் பெரிய அளவிலான பிரச்சினைகளையும் கசப்பான மன அனுபவங்களையும் கொடுத்துவிடும்.

முடிந்தளவு விட்டுக் கொடுத்துச் செல்லவும். ஆரோக்கியம்ரீதியாக திடீர் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும். கோபம் சார்ந்து ரத்த அழுத்தம் அதிகரித்தல், நரம்பு சார்ந்த குறைபாடுகள் ஏற்படுதல் என உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும்.

வெளியூர்ப் பயணங்கள், இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்தல் நல்லது, மாணவர்களைப் பொறுத்தவரை உயர் கல்விரீதியாக எடுக்கும் முடிவுகளை பெற்றோர் கையில் விட்டுவிடுதல் நல்லது.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மன அழுத்தம் நிறைந்து காணப்படுவீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.