கன்னி ஐப்பசி மாத ராசி பலன் 2022!

இராசி நாதன் புதன் கன்னி ராசியிலேயே உச்சம் பெற்று ஆட்சி செய்கிறார். செழுமை மற்றும் முன்னேற்றம் கொண்ட மாதமாக இருக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். இராசிக்கு 2 ஆம் இடத்தில் சூர்யன், சுக்கிரன், கேது உள்ளது.

சுபச் செலவுகள் குடும்பத்தில் நடக்கப் பெறும்.  தாய் வழி- தந்தைவழி சொந்தங்களால் உதவிகள் கிடைக்கப் பெறும். செவ்வாய் பகவான் 10 ஆம் இடத்தில் இருப்பதால் தொழில்துறையில் சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள்.

தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும், தொழில்ரீதியாக அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் தரும் அலைச்சலாக இருக்கும். ராசிக்கு 7 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார். தாய் உடல் நலனில் அக்கறை தேவை. மனைவிரீதியான உதவிகள் கிடைக்கப் பெறும்.

திருமண காரியங்களுக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு பொருத்தமான வரன் அமையும். ராசிக்கு 5 ஆம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பலத்தில் உள்ளதால் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து இருப்போருக்கு நற் செய்தி தேடி வரும்.

பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் சரியாகும். ஆரோக்கியம் ரீதியாகவும் பெரிய அளவில் குறைபாடு ஏதும் இருக்காது. பணவரவு உங்களுக்குச் சிறப்பாக இருக்கும், நண்பர்கள்- உறவினர்கள் இடையேயான அன்பு அதிகரிக்கும்.

சிவ பெருமான் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews