கன்னி ஆவணி மாத ராசி பலன் 2022!

விரயச் செலவுகள் ஏற்படும் காலமாக இருக்கும், அதிக அளவில் கடன்கள் வாங்கிச் செலவு செய்தலைத் தவிர்த்தல் நல்லது. முடிந்தளவு சிக்கனத்துடன் செயல்பட்டால் மட்டுமே புதிதாக கடன் வாங்குவதில் இருந்து தப்பலாம். பணரீதியாக மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் நன்மைக்காக எடுத்துக் கூறும் விஷயங்களை காது கொடுத்துக் கேட்க வேண்டும். முன் கோபம் குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும், உத்தியோக, தொழில்ரீதியாக மன உளைச்சல்கள் நிறைந்து காணப்படும்.

காதலிப்பவர்கள் இடையே பிரிவுகள் ஏற்படும், அதேபோல் குடும்பத்தில் கணவன் – மனைவி இடையேயான சிறு சிறு பிரச்சினைகளும் பெரும் பிரச்சினைகளாக உருவெடுக்கும்.

பிள்ளைகள் சார்ந்த விஷயங்களில் ஏற்படும் பிரச்சினைகள் மன நிம்மதி குறையும். சிம்மத்தில் சூரியன் இருப்பதால் தேவையில்லாத விஷயங்களில் தலையீடு வேண்டாம். நவக்கிரகர் வழிபாடு, குரு வழிபாடு செய்து வருவது மன பாரத்தைக் குறைக்கும்.

உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வயிறு மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். மருத்துவ ரீதியான செலவுகள் ஏற்படும்.

குழந்தைகள் படிப்பில் மந்தநிலையுடன் செயல்படுவார்கள்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.