Connect with us

கன்னி ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

Rasipalan

கன்னி ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள கன்னி ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் தடைகள் விலகி வளர்ச்சி ஏற்படுகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. இந்த ஆடி மாதத்தில் முக்கியமான கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால் பொருளாதார வளர்ச்சி ஏற்படக்கூடும். உங்கள் ராசிநாதன் புதன், சூரியன், ராகு இணைந்து 11-ம் இடத்தில் இருப்பதால் நல்ல வளத்தை கொடுப்பார். சனி பகவான் 4-ம் இடத்தில் இருந்து கொண்டு பல்வேறு இடையூறுகளைக் கொடுத்து வந்தார். செய்யும் காரியங்களில் தடைகள் என்று இருந்து வந்த நிலை மாறும்.

இதுவரை குடும்பத்தில் பகை, பிரிவினை சனி பகவான் ஏற்படுத்தி விட்டார். சனி வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள். சனியின் 3-ம் இடத்து பார்வை விசேஷமாக இருப்பதால் தடைகளை கடந்து சாதிப்பீர்கள். சூரியனால் நல்ல பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உபரி வருமானம் வரக்கூடும். தொழில்,வியாபாரம் நினைத்தபடி லாபம் வரக்கூடும். பணிபுரிபவர்களுக்கு மாற்றம் நிகழக்கூடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வேலைக்கு  முயற்சித்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.

உங்கள் தனாதிபதி சுக்கிரன் 12-ம் வீட்டில் இருப்பதால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பதால் அழகு, இளமை கூடும். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். குரு பகவான் தன ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தியாகி இருப்பதால் பணவரவு வரக்கூடும். உங்கள் கையில் தாராளமாக பணவரவு வரக்கூடும் என்பதால் நிரந்தர சேமிப்பில் முதலீடு செய்வது நன்மை தரக்கூடும். படித்து முடித்து  வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையக்கூடும். ஒரு சிலருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய புதிய வேலை அமையக்கூடும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top