கடவுள் பற்றி கேட்ட வெளிநாட்டவருக்கு தனது ஸ்டைலில் பதில் கொடுத்த கண்ணதாசன்..

கவியரசர் என்ற பட்டம் ஒன்றும் சும்மா வந்துவிடவில்ல நம் கண்ணதாசனுக்கு. தமிழ்த்தாயின் மகனாக தனது பேனா முனைகளில் மை நிரப்புவதற்குப் பதிலாக தனது கற்பனை வளத்தையும், தமிழ் அமுதத்தையும் ஊற்றி எழுதியதாலே காலத்தால் அழிக்க முடியாத பல எவர்கிரீன் ஹிட் பாடல்களைக் கொடுத்து தமிழ் இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்த்தவர். காதல், தத்துவம், சோகம் என நவரசங்களும் கண்ணதாசனின் பேனாவில் எழுத்துக்களாய் உதிரும். அதற்கு எம்.எஸ்.வி போன்ற ஜாம்பவான்கள் உயிர் கொடுக்க அழியாப் புகழை ஏற்படுத்தித் தருகிறது.

அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலைக் கொடுத்து இந்து மதத்தின் அத்தனை ஆச்சாரங்களையும் கடைந்தெடுத்த ஞானி கண்ணதாசன். மதுவும், மாதுவும் அவர் வாழ்வின் அங்கமாகிப் போனாலும் ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..‘ என்று அதையும் வெளிப்படையாகவே கூறியவர்.

ஒருமுறை கண்ணதாசனைக் காண வெளிநாட்டவர் வந்திருக்கிறார்கள். அவர்கள் கண்ணதாசனிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களில் ஒருவர் கண்ணதாசனிடம் உங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்? சிவன், பார்வதி, விஷ்ணு, முருகன் என்று நிறைய இருக்கிறார்கள். எங்களைப் போன்று ஒரே கடவுளை ஏன் பின்பற்றவில்லை என்று கேட்டாராம்.

அதற்கு கண்ணதாசன் அந்த வெளிநாட்டவரிடம் ‘உன் பெற்றோர்க்கு நீங்கள் யார்.?’ எனக் கேட்டார். அதற்கு அவர், ‘மகன்’ என பதிலளிக்க பின் அடுத்தடுத்து வந்த கேள்விகளால் திக்குமுக்காடியிருக்கிறார் அந்த வெளிநாட்டுக்காகரர். ‘உன் மனைவிக்கு.?’ என்று தொடர்ந்த கேள்வி  அண்ணன், தம்பி, சித்தப்பா, சித்தி, அக்கா, தங்கை, மாமன், மச்சான் என இழுத்துக் கொண்டே சென்றது.

அண்ணாவின் இறப்பினை தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயன்ற எஸ்.எஸ்.ஆர்.. சுட்டுப் போட்டமாதிரி பெரியார் கேட்ட கேள்வி

அங்குதான் நம் கவிஞர் நிற்கிறார். அந்த வெளிநாட்டவரிடம் வெறும் மண்ணைத் திங்கப் போகும் இந்த உடலுக்கே இத்தனை பெயர்கள் என்றால், யாதுமாகி, இந்த உலகையை கட்டிக் காக்கும் என் அப்பன் பரம்பொருளை அப்படி அழைத்தால் என்ன? என்று கேட்டுள்ளார். மேலும் இறைவன் எதற்குள்ளும் அடங்காதவன், எதற்குள்ளும் இருப்பவன். உன்னிலும், என்னிலும்  இருப்பவன். உன்னை அழைத்தாலும் அவனே, என்னை அழைத்தாலும் அவனே.” என அவர்களுக்குப் புரிய வைக்க சிலிர்த்துப் போயிருக்கின்றனர் அந்த வெளிநாட்டவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...