கண்ணதாசன் சிபாரிசை ஒதுக்கிய எம்.எஸ்.வி., விடாப்பிடியாக நின்ற கவியரசர்.. சாதித்த ஜமுனா ராணி..

தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்பட்ட 1960-70 களில் வந்த படங்கள் அனைத்தும் பெரும்பாலும் வெற்றியைக் குவித்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.எஸ்.வி, கண்ணதாசன் என ஜாம்பவான்கள் வீற்றிருந்த காலகட்டம் அது. பல வெற்றிகளையும், சாதனைகளையும் இந்திய சினிமா உலகிற்கு அளித்து தமிழ் சினிமாவின் பெருமையை உலகறியச் செய்தனர். மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன் தனது இசையில் எத்தனையோ பின்னணிப் பாடர்களை அறிமுகப்படுத்தி அவர்களையும் புகழின் உச்சியில் கொண்டுசேர்த்து பெருமைப்படுத்தியவர்.

டி.எம்.எஸ்., பி.சுசீலா காலகட்டத்திற்கு முன் ஜமுனா ராணி என்ற பின்னணிப் பாடகி தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது. 1957-ல் எம்.ஜி.ஆர், சாவித்ரி இணைந்து நடித்த மகாதேவி படத்திற்காக இசையமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் தான். இந்தப் படத்திற்கான 3 பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார். இப்படத்தினை மூன்று தீபாவளி கண்ட ஹரிதாஸ் என்ற சாதனைப் படத்தினை எடுத்து வெற்றி கண்ட சுந்தர்ராவ் நாட்கர்ணி இயக்கியிருந்தார்.

இவ்வாறு இருக்கையில் ஒரு பாடலுக்காக ஜமுனா ராணியின் பெயரை சிபாரிசு செய்திருக்கிறார் கண்ணதாசன். ஆனால் எம்.எஸ்.விக்கு இதில் உடன்பாடு இல்லை. பல காதல் பாடல்களையும், வேறு பாடல்களையும் பாடியவர் எப்படி இந்தப் பாடலை உணர்வுப் பூர்வமாகப் பாடுவார் என்று எண்ணி மெல்லிசை மன்னர்கள் அவரை ஒதுக்கியுள்ளனர்.

எம்.எஸ்.வி சொன்னதை கேட்டு, கோபமான கண்ணதாசன்இந்தப் பாடலை அவர் பாடினால் நன்றாக இருக்கும்.. நான் என்ன தெரியாமலா சொல்கிறேன் என்று கடிந்துள்ளார். மேலும் கண்ணதாசன் எம்.எஸ்.வியிடம் இப்போது அவரை பாட வையுங்கள். அவர் பாடுவது சரியில்லை என்றால் இந்த பாடல் பதிவுக்கான மொத்த செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று கோபமாகக் கூறியுள்ளார்.

கண்ணதாசன் சிபாரிசை ஒதுக்கிய எம்.எஸ்.வி., விடாப்பிடியாக நின்ற கவியரசர்.. சாதித்த ஜமுனா ராணி..

வேறு வழியின்றி எம்.எஸ்.வி ஒப்புக்கொண்டு ஜமுனா ராணியை பாட வைத்துள்ளார். இப்பாடலைக் கேட்ட இயக்குநர் நட்கார்னி மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று ஜமுனாராணியைப் பாராட்டினார். அதன்பிறகு அவர் வெளியில் வந்தவுடன் எம்.எஸ்.வி கண்ணதாசனிடம் தான் சொன்னதை நினைத்து வருந்தினார்.

‘காமுகர் நெஞ்சில்’ என்று தொடங்கும் அந்தப் பாடலை மருதகாசி இயற்றியுள்ளார். பாடலும் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...