எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..

காலத்தினை வென்ற பாடல்கள், சிந்தனை நிறைந்த வரிகள் என முக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தமிழ் சினிமாவில் பாடல்களை இயற்றி தன்னுடைய எழுத்துக்களால் சாகாவரம் பெற்றவர் தான் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வி., நாகேஷ் உள்ளிட்டோரிடம் மிகுந்த நட்பு கொண்டிருந்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவரை எப்போதும் ஆண்டவனே என்றுதான் அழைப்பார்.

பதிலுக்கு கண்ணதாசனும் எம்.ஜி.ஆரை ஆண்டவனே என்றுதான் அழைப்பாராம். இவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு புரிதலான நட்பு. சில முறை கருத்துவேறுபாடுகள் வந்தாலும் எம்.ஜி.ஆர். கண்ணதாசனை எங்கும் விட்டுக் கொடுக்கவில்லை. முதல்வராக ஆன பின்பும் அவரை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்தார். இத்தனைக்கும் கண்ணதாசன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தது கூட கிடையாது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தன்னுடைய சொத்துக்கள் பெரும்பாலானவற்றை விற்று சொந்தப் படம் தயாரிக்க விரும்பினார். அந்தப் படம் தான் நாடோடி மன்னன். இந்தப் படத்திற்காக கண்ணதாசனை வசனங்கள் எழுதித் தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால் கண்ணதாசனோ பாடல்களில் பிஸியாக எழுதிக் கொண்டிருந்தார். தன் மிகவும் நேசிக்கும் நண்பர் கேட்டுவிட்டாரே இல்லையென்று சொல்ல முடியுமா? மேலும் வசனங்கள் எழுதுவதிலும் ஒரு சிறிய தயக்கம். எனவே நேரிடையாக கண்ணதாசன் எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

அங்கே வழக்கமான உபசரிப்புகள் முடிந்தபின் என்ன ஆண்டவனே ஏதும் பிரச்சினையா? என்று கேட்க, ஆம் என்று கவிஞர் கூற, ஏதேனும் பணம் தேவைப்படுகிறதா என்று பதிலுக்கு எம்.ஜி.ஆர்.கேட்க, கண்ணதாசனோ இல்லை..இல்லை… உங்களது சொத்துக்களை விற்று நாடோடி மன்னன் படம் எடுக்கிறீர்கள். தற்போது இருக்கும் சூழலில் நான் முழு கவனத்தையும் செலுத்தி வசனங்கள் எழுத முடியாது. எனவே என்னால் படத்திற்கு எவ்வித நஷ்டங்களும் வரக் கூடாது. நீங்கள் வேறு யாரையாவது வைத்து எழுதிக் கொள்ளுங்கள் என்று கண்ணதாசன் கூறியிருக்கிறார்.

பாரதியாரின் மீசை, கோட் ரகசியம் இதான்.. யாரும் தெரியாத பாரதியாரைப் பற்றிய அரிய தகவல் சொன்ன எள்ளுப்பேரன்

அதன்பின் எம்.ஜி.ஆர். கண்ணதாசனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பின்னர் ரவீந்தரை வசனங்கள் எழுத வைத்திருக்கிறார். இருப்பினும் கண்ணதாசனின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக சில முக்கிய காட்சிகளுக்கு மட்டும் கண்ணதாசனை வசனம் எழுதச் சொல்ல கவிஞரும் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அப்படி உருவான சில வசனங்கள்தான் இவை.

“நான் சாதாரண குடியில் பிறந்தவன், பலமில்லாத மாடு, உழமுடியாத கலப்பை, அதிகாரம் இல்லாத பதவி, இவைகளை நாங்கள் விரும்புவதேயில்லை”

என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு. நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.” போன்ற காலத்தால் அழியாத வசனங்கள் கண்ணதாசன் எழுத்தில் உருவானவையே. நாடோடி மன்னன் மிகப்பெரிய சரித்திர வெற்றி பெற்று எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைகே திருப்புமுனை அளித்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews