ஒரே ஒரு பாட்டுக்காக வாலியை அழைத்து எழுதிய கண்ணதாசன்.. இதுதான் காரணமா?

ஒருவருக்கு கிடைத்த சான்ஸை மற்றொருவர் தட்டிப் பறிக்கும் சினிமா உலகில் தான்  பாடல்கள் எழுதிய திரைப்படத்தில் ஒரு பாடலை கவிஞர் வாலியை அழைத்து எழுதச் சொல்லியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். பாட்டுக்குத்தான் மெட்டு என்பதை கடைப்பிடித்து வந்து தான் எழுதிய பாடல்வரிகளுக்கு ஏற்ப இசையமைக்க வைத்து சினிமா உலகில் தனி சகாப்தத்தையே உருவாக்கியவர் கவிஞர் கண்ணதாசன்.

அந்தக் காலத்தில் கதாநாயகர்களே பாடலையும் இயற்றி பாடி நடித்து வந்த வேளையில் ஹீரோகளுக்காக முதன் முதலாக பாடல்கள் எழுதத் துவங்கி பின் வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளுக்கும் பாடல்கள் எழுதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர் கவியரசர் கண்ணதாசன்.

கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர் வாலி. ஆனாலும் அவருக்கு தொடக்கத்தில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அந்த காலக்கட்டத்தில், வாலியின் நெருங்கிய நண்பரான கதாசிரியர் மாறா, எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சொல்ல, இவர் தான் இசையமைத்து வந்த இதயத்தில் நீ என்ற படத்தில் வாலிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதுதான் எம்.எஸ்.வி வாலி இருவரும் இணைந்த முதல் படம்.

அதன்பிறகு தொடர்ந்து எம்.எஸ்.வி இசையில் பல பாடல்களை எழுதியுள்ள வாலி, எம்.ஜி.ஆர் படங்களுக்கு முக்கிய கவிஞராக இருந்தார். இந்த நேரத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய பாடல் ஒன்றை வாலி எழுதியுள்ளார். 1967-ம் ஆண்டு புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம் நெஞ்சிருக்கும்வரை. வேலையில்லாத 3 இளைஞர்கள் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

சிவாஜி கணேசன், முத்துராமன், நாகேஷ் கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுத வேண்டி இருந்தது.

தமிழக அரசவைக் கவிஞரான கண்ணதாசன்..பதவியை முன்கூட்டியே தனது பாடலில் கணித்த கவியரசர்

7 பாடல்கள் இடம்பெற்ற இந்த படத்தில் 6 பாடல்களை கண்ணதாசன் எழுதி முடித்துவிட்டார். படத்தின் முதல் பாடலை அவர் எழுத தயாராக இருந்தபோது, கண்ணதாசனின் உறவினர் கரைக்குடியில் இறந்துள்ளார். இந்த தகவலை அறிந்த கண்ணதாசன், நான் உடனடியாக ஊருக்கு செல்ல வேண்டும். மீதமிருக்கும் இந்த ஒரு பாடலை மட்டும் வாலிலை வைத்து எழுதிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

அன்றைய தினம் பாடல் எழுதி, அடுத்த நாள் பதிவு செய்து படப்பிடிப்புக்கு அனுப்ப வேண்டும். ஏனென்றால், இந்த பாடல் காட்சியை முடித்துவிட்டு அடுத்த நாள் சிவாஜி அமெரிக்க செல்ல இருந்ததால், தன்னால் இந்த பாடலை எழுத முடியாத நிலையில், வாலியை எழுதுமாறு கூறியுள்ளார் கண்ணதாசன்.

அந்த சூழ்நிலையில் வாலி எழுதிய அந்த பாடல் தான், ‘’நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு’’ என்ற பாடல். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பாராட்டுக்களை பெற்றிருந்தது. இந்த தகவலை கவிஞர் வாலியே பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...