கண்களை தானம் செய்த கலைஞருக்கு கன்னட ரத்னா விருது!-கர்நாடக அரசு;

திரைப்படத்தில் நடித்து அதில் வெற்றியைக் கண்டு மக்கள் மத்தியில் ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் தான் நடிகர்கள். ஒரு சில நடிகர்கள் சினிமா மட்டுமில்லாமல் சமூகப் பணிகள், நலப்பணிகள் போன்ற பலவற்றால் மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை உருவாக்கி கொண்டிருப்பார்கள்.

புனித் ராஜ்குமார்

இந்த வரிசையில் ஒருவர் புனித் ராஜ்குமார். இவர் கன்னட திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டுள்ளவர். அதோடு மட்டுமில்லாமல் தனது ரசிகர்களை மதிக்கும் குணம் உடையவர் என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.

புனித் ராஜ்குமார்

ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், முதியோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள் என பலவற்றால் ஏழை, எளிய மக்களுக்கு நல்லது செய்து கொண்டு உள்ளவர். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவின்றி உயிரிழந்தார்.

இவை கன்னட சினிமா உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகிலும் பெரும் சோகத்தை கொடுத்தது. அவர் இறந்த பின்னரும் தன் கண்களை தானம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய மாமனிதருக்கு கன்னட அரசு கன்னட ரத்னா விருது வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கன்னட ரத்னா விருது வழங்க கர்நாடக மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மறைவுக்குப் பிறகு புனித் ராஜ்குமார் கன்னட ரத்னா விருது வழங்கப்படுவதாக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment