கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் விஜய்க்கு முழு உருவ சிலை ஒன்றை வடிவமைத்து அவற்றை சென்னை கொண்டுவந்து விஜய் அலுவலகத்தில் வைத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விஜய்க்கு ஏற்கனவே தமிழகத்தின் ஒருசில இடங்களில் அவரது ரசிகர்கள் சிலை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்றத்தின் தலைமை அலுவலகத்திற்கு கன்னட ரசிகர்கள் இன்று காலை முழு உருவ விஜய்யின் சிலையை கொண்டு வந்தனர். அந்த சிலையை அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக விஜய்க்கு பரிசளிப்பதாக தெரிவித்துள்ளனர்
இதனையடுத்து அந்த சிலை தற்போது விஜய் மக்கள் மன்றத்தின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சிலையை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள விஜய் ரசிகர்கள் பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்றத்திற்கு சென்று வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
விஜய்க்கு தமிழகம் கேரளம் மட்டுமின்றி கன்னடத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது இந்த சிலை வடிவமைப்பு மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.