காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களாக இந்திய ஒற்றுமையை பயணத்தை நடத்தி வருகிறார் என்பதும் கன்னியாகுமரியில் ஆரம்பித்த இந்த பயணம் காஷ்மீரில் நிறைவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் பல பாலிவுட் சினிமா பிரபலங்களும் இந்த பாதயாத்திரை ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த ஒற்றுமை பயணத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டிருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக கனிமொழியுடன் இணைந்து ராகுல் காந்தி எடுத்த செல்பி புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஒற்றுமை பயணம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த ஒற்றுமை பயணத்தை நிறுத்த கொரோனா வைரஸ் பாதிப்பை காரணமாக மத்திய அரசு காட்டிவரும் காட்டியுள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடைபிடித்து இந்திய ஒற்றுமை பயணம் தொடர்ந்து நடைபெறும் என்றும் இந்த பயணத்தை நிறுத்த வாய்ப்பே இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.