
பொழுதுபோக்கு
கங்கனாவின் அடுத்த அவதாரம்: ஆடிப்போன பாலிவுட் திரையுலகம்!!!
தமிழில் தாம் தூம், தலைவி படங்களில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார். அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கோலிவுட்டில் நடித்த தலைவி திரைப்படம் இவருக்கும் தனிபெருமையை கொடுத்திருந்த நிலையில் தற்போது இந்திராகாந்தியை மையப்படுத்தி எமர்ஜென்சி என்ற படத்தை தயாரித்து, இயக்கி இந்திராகாந்தியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டீசரில் இந்திரா காந்தியை சார் என்று அழைப்பதற்கு பதிலாக மேம் என்று அழைக்கலாமா என்று அமெரிக்கா அதிபர் கேட்பது போன்றும் அதற்கு தனது அலுவலகத்தில் இருக்கும் எல்லோரும் சார் என்று தான் அழைப்பார்கள் என இந்திராகாந்தி கூறுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
