காந்தாரா பார்ட் 2 கட்டாயம் இருக்கு; தயாரிப்பாளர் மாஸ் அப்டேட்!!

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காந்தாரா’. ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாக நடிகை சப்தமி கவுடா நடித்துள்ளார். அதே போல் கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பி. அஜெனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். அதோடு விஜய் கிரகந்தூர் காந்தாரா படத்தினை தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் உருவான இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியானது.

kan2

இந்நிலையில் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் வசூலில் மாஸ் கட்டியது. குறிப்பாக இயக்குனரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

இதன் காரணமாக காந்தரா 2-ம் பாகம் உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக காந்தாரா படத்தின் 2-ம் பாகம் கண்டிப்பாக வரும் என தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்து உள்ளார்.

kan3

அதன் படி, முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது முந்தைய கதையாகவோ அமைய வாய்ப்பு இருப்பதாகவும், விரைவில் ரிஷப் ஷெட்டியுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.