நாளை கந்த சஷ்டி விரதம்

ஆணவம் பிடித்த அசுரனை அழித்து நீதியை முருகப்பெருமான் நிலைநாட்டிய இடம். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர். முருகனின் முக்கிய படை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருச்செந்தூரில் மாலை 5 மணியளவில் முருகன் கோவிலுக்கு அருகில் கடற்கரையில் முருகப்பெருமான் சூரன் தலையை கொய்யும் சூரசம்ஹார விழா நடைபெறும்.

கந்த சஷ்டி விரதம் 6 நாட்கள் அனுசரிக்கும்  பக்தர்கள் சூரசம்ஹாரம் முடிந்த உடன் தான் தங்களது விரதத்தை கை விட்டு கடலில் குளித்து முருகப்பெருமாணை வணங்கி தங்களது விரதத்தை நிறைவு செய்வார்கள்.

இதுவரை ஒரு வார காலம் கந்த சஷ்டி விரதம் இருக்காதவர்களும் நாளை ஒரு நாள் விரதம் இருக்கலாம்.

காலை முதல் மாலை வரை விரதம் இருந்து மாலை கந்த சஷ்டி விரதம் முடிந்ததும் குளித்து முடித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

குழந்தை இல்லாதவர்கள், திருமணம் முடியாதவர்கள் என சகல பிரச்சினைகள் உள்ளவர்களும் தங்கள் பிரச்சினை தீர்ந்து கோரிக்கை நிறைவேற கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளலாம்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print