36 முறை கந்த சஷ்டி கவசம் சொன்னால் என்ன நடக்கும்

கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் பால தேவராய ஸ்வாமிகள் இவர் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வைத்து முருகனுக்குரிய இந்த முக்கிய பாடலை இயற்றினார்.

இன்று உலகம் முழுவதும் கோவில்களில் கந்த சஷ்டி கவசம் ஒலிக்காத இடமே இல்லை. சூலமங்களம் சகோதரிகள் குரலில் எங்கும் இந்த பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட கந்த சஷ்டி கவசத்தின் பாடல் வரிகளில், ஒரு நாள் முப்பாத்தாறு உறுகொண்டு ஓதியே ஜெபித்து உகந்து நீறு அணிய என்ற வரிகள் அதிலேயே வரும்.

இந்த கந்த சஷ்டி கவசத்தை 36 முறை சொல்லிவிட்டு விபூதி தரித்து முருகனை நினைத்து வணங்கினால் மிகப்பெரும் சக்தி கிடைக்கும் என ஆன்மிக பெரியவர்களால் சொல்லப்படுகிறது.

பிரபல ஆவியுலக ஆராய்ச்சியாளர் திரு.விக்ரவாண்டி ரவிச்சந்திரன் இதை ஒருமுறை முயன்று பார்த்தாராம் 36 முறை அவர் சொல்லி பார்த்த உடன் அவர் வீட்டின் அருகே உள்ள பூனை சாதாரணமாக அங்கிருந்த கிணறு தாண்டி செல்வதை பார்த்து வியந்தாராம். இந்த பூனை இப்படி விழாமல் சாதாரணமாக தாண்டி செல்கிறதே விழுந்து விட்டால் என்ன செய்வது என யோசித்துள்ளார்.சிறிது நேரத்தில் அந்த பூனை உள்ளே விழுந்து விட்டதாம் உடனே பூனையை காப்பாற்றி விட்டார்களாம்.  இப்படியாக நடக்கபோகும் நிகழ்வுகள் கூட நமக்கு ஈஎஸ்பி பவர் போல கந்த சஷ்டி கவசத்தை 36 முறை  படித்தால் தெரிய வரும் என்று சொல்லப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews