காமராஜர் பிறந்தநாள்: தமிழக முதல்வர் டுவீட்!!

நாடு முழுவதும் இன்றைய தினத்தில் கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் தனது டுவிட்டர் வாயிலாக காமராஜர் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன் படி, பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்விவளர்ச்சி நாளாக அறிவித்தது கலைஞர் என குறிப்பிட்டுள்ளார். நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூற வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதோடு கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள் என கூறியுள்ளார்.

தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதியளிப்போம் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment