கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த தின கொண்டாட்டம்!

8d2054eef02aa5c6bad891513497ade3

முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரமுகர்கள் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மண்டபத்தில் கர்ம வீரரின் பிறந்த நாளையொட்டி அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர் 

d99fbfce401dbb64bb83e702db44c8b7

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. காமராஜரின் பிறந்தநாளை கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களும் கொண்டாடி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் இதுகுறித்து தனது டுவிட்டரில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி இன்று காலை நடந்த வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment