கமலின் விக்ரம் காப்பி கதையா.. வசமாக சிக்கிய லோகேஷ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் விக்ரம். இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் 3 அன்று வெளிவந்தது. மேலும் படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

இப்படம் வெளிவந்த நாள் முதல் இன்று வரை ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படம் உலக அளவில் ரூ. 625 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. கமல்ஹாசன் நடித்த படங்களில் அதிக வசூலை தட்டி தூக்கிய படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் கதை குறித்து பல சர்ச்சை தகவல்கள் வலம் வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படமும், 2015ல் வெளிவந்த பெட்டர் கால் சால் எனும் பிரபல தொலைக்காட்சி தொடருடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அந்த கதையும் இந்த கதையும் ஒரே கதைக்களத்தை கொண்டு இருப்பதாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த குழப்பம் தற்பொழுது சினிமா ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் படத்திற்கும், பெட்டர் கால் சால் தொடர்புக்கு என்ன சம்பந்தம் என வாங்க பார்க்கலாம்.

இந்த தொடரில் ஹீரோ மைக் 30 ஆண்டுகளாக காவல் துறையில் நேர்மையான அதிகாரியா பணிபுரிந்து வருகிறார். அதே நேரத்தில் அவரின் மகன் மார்க்கும் காவல் துறையில் இணைந்து பணியாற்ற துடங்குகிறார்.

ஊழல் நிறைந்த டிரக்ஸ் கேங்குடன் தொடர்பு கொண்ட உயர் அதிகாரிகளின் நெருக்கடிக்கு இடையில் மைக் நியாயமாக இருக்க போராடுகிறார். அதே போல அவரின் மகன் மார்க் ஊழலுக்கு துணைபோகாமல் நியாயத்திற்காக போராடி வருகிறார்.

அப்பொழுது உயர் அதிகாரிகளால் மார்க் கொல்லப்படுகிறார். இதனால் ஹீரோ மைக் மன அழுத்தத்திற்கும் ஆளாகி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். ஆனால் அவர் குடிகாரன் போல நடித்து தனது மகனின் கொலைக்கு காரணத்தை தேடி வருகிறார்.

அதன் பின் படத்தில் தனது பேரக்குழந்தையை காப்பாற்ற போராடுவது தான் கதையின் மையமாக இருந்து வருகிறார். இந்த கதை போலத் தான் விக்ரம் படத்திலும் கமல் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்து மகனின் கொலைக்கு காரணத்தை தேடிவருவார்.

படம் முழுக்க குடிகாரன் போல மற்றவர்களை ஏமாற்றி தந்திரமாக செயல்படுவார். படத்தின் இறுதியில் பேரக்குழந்தையை காப்பாற்றுவதாக படத்தின் கதை அமையும். இந்த இரண்டு படத்தில் மைய கதை ஒன்றாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிய விதத்தில் சில முரண்பாடுகள் உள்ளது.

மாவீரன் படத்தில் மகள் அதிதியின் நடிப்பை பாராட்டிய இயக்குநர் சங்கர்!

விக்ரம் மற்றும் பெட்டர் கால் சால் ஆல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமையும் அதை சுற்றியுள்ள சர்ச்சைகள் லியோ திரைப்படத்தின் வெற்றியின் மீது தற்காலிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மேலும் இந்த விவாதம் தொடரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் விக்ரம் பட குழுவினர் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எப்படி தீர்வு காண்பார்கள். அவர்கள் இந்த விசயத்தில் விளக்கம் அளிப்பார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...