விதிமுறைகளை மீறி பள்ளிக்குள் கமல் செய்த செயல்… வைரல் வீடியோ!

கோவை துணி வணிகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் மாணவிகள், ஆசிரியர்களுடன் கலந்துறையாடி, புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட  சம்பவம் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளிக்கு வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அங்கிருந்த மாணவிகள் ஆசிரியர்களுடன் கலந்துறையாடினார். பின்னர் அங்கு காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை திறந்து வைத்தார்.

அரசியல் கட்சி பிரமுகர்கள் பள்ளி வேலையில் கலந்துறையாட கூடாது என்ற விதிமுறைகள் இருக்கும்  நிலையில் கமலஹாசன் சென்று கலந்துறையாடி குழுப்புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment