இது இரண்டாவது சுதந்திரப் போர்.. காந்திய வழியில நீங்க.. நேதாஜி வழியில நான்.. வெளியான இந்தியன் 2 டிரைலர்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 டிரைலர் வெளியாகி பெரிதும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை ரிபீட் மோடில் கேட்க வைத்துக் கொண்டிருந்த சூழலில் தற்போது டிரைலரும் வெளியாகி உள்ளது. டீசரில் கருப்புப் பணம் ஒழித்தல், கொரோனா லாக்டவுன் போன்றவற்றைக் காட்டியிருந்த இயக்குநர் ஷங்கர் தற்போது டிரைலரில் மிரட்டும் விதமாக கமல்ஹாசனின் பல்வேறு கெட்டப்புகளை காட்டியிருக்கிறார்.

கடந்த 1996-ம் வருடம் கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் படம் பெரும் வரவேற்பினைப் பெற்றது. அப்போதைய தமிழ்சினிமாவின் உச்ச வசூல் படமான பாட்ஷா படத்தின் சாதனையை முறியடித்தது. இதனையடுத்து இந்தியன் 2 திரைப்படம் கிட்டத்தட்ட 28 வருடங்களுக்குப் பிறகு வெளிவர உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தியன் படத்தில் வெற்றிக்கு முக்கிய காரணமே அப்படத்தின் மாஸ் வசனங்கள்தான். முதல்படத்தில் சுதந்திரப் போராட்டத்தையும், லஞ்சத்தையும் பற்றிச் சொன்ன இயக்குநர் ஷங்கர் இப்படத்தில் தமிழ்நாட்டைத் தாண்டி தேசிய அளவில் உள்ள பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளார். கமல்ஹாசன் முந்தைய இந்தியன் தாத்தா போன்ற தோற்றத்துடனே தோன்றியிருக்கிறார். இதில் சற்று மாறுபட்ட வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

சார்பட்டா பரம்பரை ‘டாடி’ ஜான் விஜய்யின் மாமனார் இந்தப் பிரபல அரசியல்வாதியா?

வசனங்களைப் பொறுத்தவரை நெடுமுடி வேணு என்னோட சர்வீஸ்ல நான் ஜெயிக்காம விட்ட கேஸ் இது ஒண்ணுதான் என்று கூறும் வசனமும், என்ன கருமம்டா இது என்று கேட்க, அது கருமம் இல்ல வர்மம் என்று இந்தியன் தாத்தாவின் வர்மக்கலை தாக்குதலையும், மேலும் இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம், காந்தி வழியில நீங்க.. நேதாஜி வழியல நான் என்று கமல்ஹாசன் பேசும் வசனங்களும் பட்டையைக் கிளப்புகின்றன.

தற்போது நாடு இருக்கும் சூழலில் இந்தியன் தாத்தா இப்போது வந்தால் எப்படி இருக்கும் என்பதை குறித்த கதைதான் இந்தியன் 2 கதையின் முக்கிய கருப்பொருளாக இருக்கிறது. கமல்ஹாசனின் ஆக்ஷன் காட்சிகளும், ஷங்கரின் பிரம்மாண்டமும், அனிருத்தின் அதிர வைக்கும் இசையும் இப்போதுள்ள டிரண்டுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாகத்தில் காஜல் காட்சிகள் இடம்பெறவில்லை. இந்தியன் 3 பாகத்தில் காஜல் அகர்வால் காட்சிகள் இருக்கும் எனத் தெரிகிறது. மொத்தத்தில் பழைய இந்தியன் தாத்தா இந்தியன் 2 மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews