முரட்டுக்காளை படத்தை தவறவிட்ட கமல்ஹாசன்.. 24 வருஷம் கழிச்சு ஆதங்கத்தை தீர்த்த உலக நாயகன்.. அதிசய பின்னணி..

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் சில படங்களில் நடிப்பதற்காக பிரபல நடிகர்கள் ஒப்பந்தமாகி படப்பிடிப்பு ஆரம்பமான பின்னர் திடீரென தனிப்பட்ட காரணங்களால் அந்த நடிகர்கள் விலகுவதை பற்றி நாம் வழக்கமாக நிறைய செய்திகளை கேட்டுள்ளோம். இதன் பின்னர் வேறு ஏதாவது நடிகர் நடிப்பில் அந்த படம் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் வெற்றி அடையவோ அல்லது தோல்வியடைவோ கூட செய்யும்.

அந்த வகையில் நடிகர் விஜய் தவற விட்ட உன்னை நினைத்து திரைப்படத்தில் தான் பின்னர் சூர்யா நடித்து படமும் பெரிய வெற்றி பெற்றிருந்தது. இதேபோல அஜித் தவற விட்ட நான் கடவுள் திரைப்படத்தில் ஆர்யா நடிக்க அந்த திரைப்படமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது. இதேபோல சிம்பு தவறவிட்ட கோ திரைப்படத்தில் தான் ஜீவா நடித்து அந்த சமயத்தில் முன்னணி நடிகராகவும் உயர்ந்து வந்தார்.

இப்படி பல நடிகர்கள் நடிக்க இருந்த திரைப்படங்களிலோ அல்லது ஷூட்டிங் பாதியில் நின்று போன திரைப்படம் வேறு யாராவது நடித்து மிகப்பெரிய அளவில் திருப்புமுனையையும் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி உள்ளது. அப்படி இருக்கையில் ரஜினிகாந்த் நடித்த ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை கமலஹாசன் தவறவிட்ட நிலையில் அந்த ஆதங்கத்தை தீர்ப்பதற்காக அவர் செய்த விஷயத்தை தற்போது பார்க்கலாம்.

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘முரட்டுக்காளை’. ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், சுமலதா, ரதி அக்னிஹோத்ரி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ஏவிஎம் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான முதல் திரைப்படமாகவும் இது அமைந்திருந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னால் அவர்கள் தயாரித்த முதல் படமாகவும் இது இருந்தது. மிக கமர்சியல் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் வசனங்களும், சண்டை காட்சிகளும் இன்றளவிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தான் வருகிறது.
ஜல்லிக்கட்டு தடையால் 'விருமாண்டி' படத்தின் காளைக்கு நேர்ந்த கதி! | Virumandi Jallikattu Bull in velliangiri Gaushala - Vikatan

அப்படி இருக்கையில் இந்த திரைப்படத்தில் முதலில் ரஜினிகாந்த்திற்கு பதிலாக கமல்ஹாசன் நடிக்க இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் அந்த நேரத்தில் வேறு படங்களில் பிஸியாக இருந்ததன் காரணமாக முரட்டுக்காளை படத்தில் நடிக்க முடியாமல் போனதால் அவருக்கு பதிலாக ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் படம் ஹிட்டாகி இருந்தது.

முரட்டுக்காளை படத்தை மிஸ் செய்ததால் சற்று ஆதங்கத்தில் இருந்து வந்த கமல்ஹாசன் அதனை சரி செய்வதற்காக வேறொரு ரூட்டை எடுத்திருந்தார். முரட்டுக்காளை திரைப்படத்தில் ரஜினிகாந்த் காளை அடக்கும் ஜல்லிக்கட்டு காட்சி இடம்பெற்றிருக்கும்.

இந்த காட்சி மிக மிக மாசாக அமைந்திருக்கவே படத்தை தவறவிட்ட கமல்ஹாசன் 24 ஆண்டுகள் கழித்து அதாவது 2004 ஆம் ஆண்டு தனது இயக்கத்தில் உருவான விருமாண்டி என்ற திரைப்படத்தில் ஒரு ஜல்லிக்கட்டு காட்சியை வைத்திருப்பார். ஒரு சில சிஜி காட்சிகளை தவிர மற்ற அனைத்தும் மிகத் தத்ரூபமாக இந்த திரைப்படத்தில் கமல் செதுக்கியிருந்த நிலையில் முரட்டுக்காளைக்கு இணையாக ஒரு காளையை அடக்கும் காட்சியை உருவாக்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...