முதல் பெண் அதிபர்! அமெரிக்க அதிபராக இருந்தும் அரியணையில் அமராத கமலா ஹாரிஸ்!!

வல்லரசு நாடுகள் பட்டியலில் சில வருடங்களுக்கு முன்பு வரை முதலிடத்தில் இருந்தது அமெரிக்கா. இந்த அமெரிக்காவானது இந்தியாவுடன் மிகுந்த நட்போடு காணப்படும் நாடுகளில் மிக முக்கியமான ஒன்றாகும்.

கமலா ஹாரிஸ்

இந்த நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபராக உள்ளார் ஜோ பைடன். அவருக்கு உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக சில மணி நேரம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

துணை அதிபர் கமலா ஹாரிஸ் பூர்விகம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக 1.25 மணி நேரம் பதவிவகித்தார். அதிபருக்கு மயக்க மருந்து தந்து மருத்துவ சோதனை நடந்ததால் கமலா ஹரிஷுக்கு தற்காலிக அதிகாரம் தரப்பட்டது.

1.25 மணிநேரம் அதிகாரம் வழங்கப்பட்ட போதும் அமெரிக்க அதிபர் இருக்கையில் கமலா ஹாரிஸ் அமரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு மீண்டும் அமெரிக்க அதிபர் பணியை தொடங்கினார் ஜோ பைடன்.அமெரிக்காவில் பெண் அதிபராக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் துணை அதிபர் கமலா ஹாரிஸ்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment