பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய கமல்! இந்தியன் 2விற்கு வாங்கும் சம்பளம் மட்டும் இத்தைனை கோடியா?

விக்ரமின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, யுனிவர்சல் நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த பெரிய படமான இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஷங்கர் சண்முகம் இந்தப் படத்தை இயக்குகிறார், இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.

படத்திற்க்காக கமல்ஹாசன், 14 மொழிகளில் 10 நிமிட டயலாக்கை, அதுவும் ஒரே ஷாட்டில் சொல்லியிருக்கிறார் என்பதுதான் சமீபத்திய இன்னும் சுவாரஸ்யமான தகவலாக வந்துள்ளது.

indian 2 444

ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் இந்த மெகா திரைப்படத்தில் ஒரு பகுதியாக உள்ளனர், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இந்தியன் 2 திரைப்படத்தின்70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 30 சதவீத காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. மேலும் இயக்குநர் ஷங்கர் தனது சிசியர்களாகிய இயக்குநர்கள் வசந்தபாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் ஆகியோர் இப்படத்தை இணைந்து இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இணையத்தில் சாதனை படைக்கும் பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் ஜெசிகா பாடல்!

indian 2

இந்நிலையில் தற்போழுது விறு விறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பில் படத்திற்க்காக கமல் வாங்கும்சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கமல் இந்த படத்திற்கு 150 கோடி சம்பளம் வாங்க போவதாக கூறப்படுகிறது.

விக்ரம் படத்தில் 130 கோடி சம்பளம் வாங்கியதாகவும் அதை தொடத்தொடர்ந்து இந்தியன் படத்தின் பிஸ்னஸ் அதிக அளவிற்கு விற்க காத்திருப்பதால் கமல் தனது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment