
பொழுதுபோக்கு
பீஸ்ட் பட சாதனையை தூக்கி சாப்பிட்ட கமல்.. பீஸ்ட்க்கு இப்படி ஒரு சோதனை!!..
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சொதப்பிய படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இவர்களுடன் செல்வராகவன் யோகி பாபு உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து இருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார் ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டிருந்தார்.
தமிழக விநியோக உரிமையை ரெட்ஜெயிண்ட்மூவீஸ் பெற்றிருந்தது. இந்த படத்தில் இருந்து வெளியான அரபிக்குத்து பாடல் ஹிட் கொடுத்தது. படம் வெளியாகும் முன்னரே அரபி குத்துப்பாடல் முதலாக வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான இந்த பாடல் வரிகள் பட்டிதொட்டியெங்கும் பரவியது.
நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்கள் என பலரும் இதற்க்கு ஸ்டெப்ஸ் போட்டனர். இந்த பாடல் வெளியாகி மூன்று நாட்களில் யூடியூபில் மட்டும் 16 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. தற்போது கமல் நடிப்பில் வெளியாகி இருக்கும் பத்தல பத்தல பாடல் இந்த சாதனையை முறியடித்துள்ளது.
கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியாகிய முதல் சிங்கிள் எதிராக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் இந்த பாடல் வெளியாகி மூன்று நாட்களில் 17 மில்லியன் பார்வையாளர்கள் குவித்து அசைக்கமுடியாத அரபி குத்துப்பாடல் சாதனையை முறியடித்துள்ளது.அட்லீக்கு தேவையா ? திருடிய கதைக்கு ஷாருக்கான் ஹீரோவா ??
அரபிக்குத்து பாடல் மூன்று நாட்களில் செய்த சாதனையை தற்போது கமலின் விக்ரம் படம் முதல் சிங்கள் பத்தல பத்தல முறியடித்துள்ளது. லோகேஷ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 3 தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயிண்ட்மூவீஸ் விளம்பரம் செய்து வருகிறது. அந்த வகையில் விக்ரம் ஆடியோ மற்றும் டிரைலர் லான்ச் சென்னையில் பிரமாண்டமாக சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
