News
கொரோனா விழிப்புணர்வு குறித்து கமல் வெளியிட்ட வீடியோ

கொரோனா வைரசுக்கு எதிராக திரையுலக பிரபலங்கள் பலர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் சற்றுமுன் உலக நாயகனும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இது குறித்த ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது
விலகி இருத்தல் அவசியம். வீட்டில் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள். மனதுக்குப் பிடித்தமானவர்களுடன் போனில் தினமும் பேசுங்கள். ஆனால் வாங்க எல்லோரும் மீட் பண்ணலாம் என யாராவது கூப்பிட்டால் தயவுசெய்து செல்ல வேண்டாம். அவர்களால் நமக்கும், நம்மால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பொறுப்பாக இருக்க வேண்டும்
வந்தால் செய்ய வேண்டியதை வரும் முன்னாடியே செய்ய வேண்டும். விலகி இருங்கள் பாதுகாப்போடு இருங்கள். நமக்கு ஒன்றும் வராது என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை, மற்றும் அசட்டு தைரியத்தாலும் இந்த நோய் பரவ நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது. முன்னெச்சரிக்கை தான் முக்கியமான விஷயம். மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு நடிகர் கமலஹாசன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்
