
Entertainment
சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டு கமல் போட்ட ட்வீட்! என்ன நடந்தது?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார்,பத்து நிமிடம் தான் சூர்யா வந்தாலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இதைப் பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் படையெடுக்கும் என கூறப்படுகிறது.அனைவர் மத்தியிலும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
Dear @Suriya_offl Thambi,
This was long overdue you know it. Love, you already had. Now increase that demography. All the very best for you my thambi , sorry Thambi Sir. ???????? https://t.co/RfeGUO47vD— Kamal Haasan (@ikamalhaasan) June 4, 2022
விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சூர்யா முதன்முறையாக விக்ரம் படம் குறித்து ட்வீட் கூறியிருப்பது, அன்புள்ள கமலஹாசன் அண்ணா. விக்ரம் படத்தில் உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறி உள்ளது. இதை உருவாக்கி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என்று பதிவிட்டிருக்கிறார்.
சூர்யாவின் பதிவை ரீட்விட் செய்த கமல்ஹாசன், ” அன்புள்ள சூர்யா தம்பி, இது உங்களுக்கு கொடுக்க வேண்டிய பல நாள் நிலுவை என்பது உங்களுக்கு தெரியும். அன்பு, உங்களிடம் ஏற்கனவே இருக்கிறது. தற்போது மக்களிடம் அதை அதிகப்படுத்துங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தம்பி , மன்னிக்கவும் தம்பி சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் படத்தின் NFT! அப்படினா என்ன தெரியுமா?
