Connect with us

இந்தியன் 2 படத்தில் கமல் ஜோடியாகும் நடிகை யாரு தெரியுமா? நம்ம ரஜினி ஹீரோயின் தான்!

indian 2 1

பொழுதுபோக்கு

இந்தியன் 2 படத்தில் கமல் ஜோடியாகும் நடிகை யாரு தெரியுமா? நம்ம ரஜினி ஹீரோயின் தான்!

கமல்ஹாசன் நடித்த “இந்தியன்” திரைப்படம் 1996 இல் வெளியானது, இதில் மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா மடோன்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்ற இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது.

அதை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விழிப்புணர்வு அதிரடி திரில்லர் படமான இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டது, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2020 இல் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட மேலும் கொரானா காரணமாக தொடர்ந்து நிறுத்தப்பட்டது.

Shankar

ஆனால் இப்போது அது இந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அந்த படத்தில் நடிப்பவர்களின் கால்ஷீட் கேட்டு முறைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா ,பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி ஆகியோர் இடம் பெற்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தின்70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 30 சதவீத காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. இந்தியன் 2 ல் வயதான கெட்அப் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக டாப் மேக்அப் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தான் கமல் அமெரிக்கா சென்றுள்ளார்.

802870 24

இதற்கிடையில், கதாநாயகியாக நடித்த நடிகை காஜல் அகர்வால் இனி படத்தின் ஒரு பகுதியாக இல்லை என கூறப்படுகிறது. எனவே அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட முடிவு செய்து உள்ளனர். காஜல் அகர்வாலுக்கு பதிலாக கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க இந்தி நடிகை தீபிகா படுகோனேவிடம் படக்குழுவினர் பேசி வருதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் பாடல் – முதல் சாதனை! பாடலுக்கே இவ்வளவு வரவேற்பா?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top