ரஜினியுடன் போட்டி போடும் கமல்! வென்றது யாரு தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக திறமையாக நடித்துள்ளார். பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கிறார்கள்.வர்த்தக வட்டாரங்களின்படி, இப்படம் கமல்ஹாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாகியுள்ளது.

vikram latest

விக்ரம் படத்தின் ஓடிடி உரிமம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கையில் இருப்பதால் ஓடிடி வெளியீட்டிற்கான தேதி எப்போது அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில் விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ.345 கோடிக்கும் மேல் வசூலை தட்டியுள்ளது. இதற்காக இப்படத்தின் சக்சஸ் மீட் 2 நாட்களின் முன் நடைபெற்றது. இதில் கமல், லோகேஷ், உதயநிதி, அனிருத் என முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அதிகம் வசூலித்த கோலிவுட் படங்களின் வசூல் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது விக்ரம் படம். அப்போ முதல் இடத்தில் யாருடைய படம் தெரியுமா … ரஜினியின் படம் தான்.
maxresdefault 36
சங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் எந்திரன் 2. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தான் அதிகம் வசூலித்த கோலிவுட் படங்களின் வசூல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது

 

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயன்! மீண்டும் அதே லூக்கா!

மேலும் அதிகம் வசூலித்த இந்திய படங்களில் வரிசையில் 8 வது இடத்தில் 2.0 படமும் அதை தொடர்ந்து 30 ஆவது இடத்தில் விக்ரம் படம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment