
பொழுதுபோக்கு
லோகேஷ்-க்கு தன் கைப்பட கடிதம் எழுதிய கமல்.. அதில் என்ன இருந்தது தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
உலக நாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்கிடையே மிகவும் பிரமாண்டமாக வெளியான விக்ரம் படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது என்று கூறலாம். இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வரும் விக்ரம் படமானது முதல்நாள் உலக அளவிலான இமாலய வசூல் தகவல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் வெளிவந்து ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திகொண்டு வருகிறது. உலக அளவில் விக்ரம் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்தது என கூறப்படுகிறது. இதில் இந்திய அளவில் மட்டும் 35 கோடியே 25 லட்சம் ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் 20.4 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. 3 நாள்களில் 150 கோடியை கடந்துள்ளது. வரும் நாட்களில் இந்த வசூலை விட அதிகம் வசூல் செய்யும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் கமலை விட பலர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜை வாழ்த்தி நடிகர் கமலஹாசன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் “லோகேஷ் கனகராஜூக்கான பாராட்டுகள் தொடர வாழ்த்துகள்; அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள் , லோகேஷின் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும்”. என்று அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.
கமலஹாசனின் இந்த கடிதத்தை சுட்டிக்காட்டி டுவீட்டரில் கருத்து தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “கடிதத்தைப் படித்தபோது உண்டான உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நன்றி ஆண்டவரே” என்று அவர் அதில் பதிவிட்டார்.
“Life time settlement letter”
Words can’t express how emotional I’m feeling reading this!
Nandri Andavarey @ikamalhaasan ???????????????????????? pic.twitter.com/5yF4UnGnVj— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 6, 2022
