எங்கே தன்னை ஓரம்கட்டி விடுவாரோ என்ற பயத்தில் எஸ்.ஜே.சூர்யாவை ரிஜெக்ட் செய்த கமல்…!

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் கமல் தவிர இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படி நடிப்பு ஜாம்பவான்கள் நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

எஸ்.ஜே.சூர்யா

இந்நிலையில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து மிரட்டியதோடு பலரின் பாராட்டையும் தட்டி சென்றார். அந்த வகையில் அவரின் நடிப்பை கண்டு வியந்தவர்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எஸ்.ஜே.சூர்யாவை விக்ரம் படத்தின் இணைத்தால் படம் நிச்சயம் வேற லெவல் வெற்றி பெறும் என முடிவு செய்த லோகேஷ் கனகராஜ் மிக குறைந்த நாளில் எஸ்.ஜே.சூர்யாவுக்காக ஒரு வலுவான கேரக்டரை விக்ரம் படத்தில் உருவாக்கி அவருக்காக அதிரடி டயலாக்குகளையும் தயார் செய்து விட்டாராம்.

உடனே தனது இந்த யோசனையை கமலிடம் கூறி எஸ்.ஜே.சூர்யாவிற்கான கேரக்டர் மற்றும் டயலாக்குகளை கமலிடம் காட்டியுள்ளார் லோகேஷ். அதை கண்ட கமலுக்கு நிஜமாகவே பிடித்திருந்ததாம். ஆனால், “நல்லாத்தான் இருக்கு ஆனா நாம ஏற்கனவே எல்லாத்தையும் ஃபைனலைஸ் பண்ணிட்டோம். இனி புதுசா எந்த முயற்சியும் வேண்டாம்” என கூறி விட்டாராம்.

லோகேஷும் வேறு வழியின்றி கமலின் முடிவிற்கு ஓகே கூறி விட்டாராம். ஸ்கிரிப்ட் நன்றாக இருந்தும் கமல் மறுக்க காரணம் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு தானாம். மாநாடு படத்திலேயே ஹீரோ சிம்புவை ஓரம்கட்டி இவர் தான் பெயர் பெற்று சென்றார். அந்த வகையில் எங்கே நம்மையும் ஓரங்கட்டி விடுவாரோ என்ற பயத்தில் தான் கமல் அவரை வேண்டாம் என கூறியதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment