டெல்லி: ராகுல் யாத்திரையில் கமல் பங்கேற்பு!!

இந்திய ஒற்றுமை பயண யாத்திரையில் ராகுல்காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குமரி முதல் காஷ்மீர் வரையில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி வருகிறார். இந்நிலையில் டெல்லியை கடந்த பிறகு மீண்டும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பாரத் ஜோடோ யாத்திரை துவங்க உள்ளது.

இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூட்டணி சேர இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக 108-வது நாளாக தலைநகர் டெல்லியில் ராகுல்காந்தியுடன் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன் யாத்திரையில் பங்கேற்றுள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சியினை வலுசேர்க்கும் வகையில் அக்கட்சியின் தொண்டர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஒற்றுமை பயண யாத்திரை நடைப்பெற்று வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.