
பொழுதுபோக்கு
அஜித் இயக்குனருடன் கைகோர்க்க தயாராகிய கமல்! அரசியல் படமா இருக்குமோ!

கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் விக்ரம், இளம் இயக்குனரான லோகேஷ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பிளாக்பாஸ்டர் வெற்றியை பெற்றது. விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படம் சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ளனர், இந்நிலையில் இளம் இயக்குநர் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களாக கொடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் வினோத். பச்சை குதிரை படத்தில் டைரக்டர் பார்த்திபனிடமும், கோலி சோடா படத்தில் விஜய் மில்டனிடமும் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார் வினோத், 2014 ல் நட்டி நடித்த சதுரங்க வேட்டை படத்தில் டைரக்டராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்
அதை தொடர்ந்து 2016 ல் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கினார், 2019ல் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியுள்ளார் ,இரண்டாவந்து முறையாக அஜித்துடன் இணைந்து வலிமை படத்தையும் இவர் தான் இயக்கியுள்ளார். தற்போது அஜித்தை வைத்து ஏ.கே. 61 படத்தை இயக்கி வருகிறார்.
பொன்னியின் செல்வன் பாடல் – முதல் சாதனை! பாடலுக்கே இவ்வளவு வரவேற்பா?
மேலும் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு கமர்சியல் படத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
