இச்சாதாரி நாகம் பலி வாங்குமா? – வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்த நீயா திரைப்படம் வெளிவந்து 43 ஆண்டுகள் நிறைவு!

நீயா திரைப்படம் கடந்த 13.01.1979ம் ஆண்டு வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் கமல், ஸ்ரீபிரியா , ஸ்ரீகாந்த், நம்பியார், முத்துராமன், கவிதா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் அந்த நேரத்தில் புகழ்பெற்று இருந்த இயக்குனர் துரை அப்படத்தை இயக்கி இருந்தார்.

ஒரு இடத்துக்கு பிக்னிக் செல்லும் நண்பர்கள் இணைவாக இருந்த பாம்பை சுட்டு கொன்று விடுகின்றனர். அதில் கமல்ஹாசன் எதுவும் செய்யாவிட்டாலும் அந்த பாம்பின் இணையாக இருந்த பெண் பாம்பு தன் காதலன் பாம்பை கொன்று விட்டார்கள் என கதறி அழுகிறது.

இச்சாதாரி நாகமான அந்த பெண் பாம்பு தன் காதலன் பாம்பை கொன்றவர்களை தேடி தேடி பழிவாங்குகிறது. எவ்வளவு ஓடி ஒழிந்தாலும் யாரையும் அந்த பாம்பு விடாமல் பழி வாங்குகிறது.

இறுதியில் நாயகன் கமல்ஹாசனையும் அந்த பாம்பு பழி வாங்க நினைக்க அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே நீயா படத்தின் கதையாகும்.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான பாணியில் அமைக்கப்பட்டது. கதைக்களம் வேகமாக நகர்ந்தது.

படத்தின்  முதல் காட்சியிலேயே பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் அவர்களின் குரலில் இச்சாதாரி நாகம் என்றால் என்ன என்று விளக்கப்பட்டது.

இந்த படத்துக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் என்ற பாம்பு பாடல் இந்த படத்தில் மிகவும் புகழ்பெற்ற பாடலாக விளங்கியது.

இன்றுடன் இப்படம் வெளியாகி 43 ஆண்டுகள் ஆகி விட்டது. கமல்ஹாசன் நடித்த பொங்கல் ப்ளாக் பஸ்டர்களில் இப்படம் புகழ்பெற்றது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment