கலைஞர் பிறந்தநாளுக்கு வெளியாகும் கமல் படம்…!! ஏதோ உள்குத்து இருக்கோ?
தன் நடிப்பாலும் திறமையாலும் இன்று மக்கள் மத்தியில் உலகநாயகன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாஸன் என்றால் மக்களுக்கு மட்டுமின்றி திரை உலகில் உள்ள நடிகர்களுக்கும் மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் காணப்படும் .
இத்தகைய உலகநாயகன் கமலஹாசன் திடீரென்று தமிழகத்தில் அரசியலில் களமிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி அவர் தற்போது மக்கள் நீதி மயம் என்ற கட்சியை நிறுவி சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றில் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கட்சி தேர்தலில் களமிறங்கி போட்டியிட்டாலும் அவர் தனது நடிப்பு தொழிலை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படி தற்போது தனது நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் என்ற திரைப்படம்.
இந்த திரைப்படத்தை பிரபல வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்ட நிலையில் கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி விக்ரம் படம் ஜூன் மூன்றாம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று கமலஹாசன் கூறியுள்ளார்.
