சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட கமல்! தட்டி தூக்கிய ஆக்சன் கிங்!!

கமல்ஹாசன் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, அரசியல், தயாரிப்பாளர் என பல பணிகளில் மிகவும் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் கமல்ஹாசன் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இருப்பினும் அவரது கைவசம் பல படங்கள் உள்ளன. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வரும் கமல் அதனை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர கமல் கதை எழுதி தயாரிக்க உள்ள புதிய படம் ஒன்றில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள்.

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக கமல் சிகிச்சை பெற்று வருவதால் அவர் ஒப்பந்தமாகியுள்ள படங்களின் பணிகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் விரைவில் குணமாகி வந்ததும் பணிகளை உடனே தொடங்கி விடுவார்கள். தற்போது கமல் மிஸ் செய்த ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் படத்தை தான் கமல் தவறவிட்டுள்ளார். சங்கர் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ஜென்டில்மேன். அரசியல் பேசும் படமாக உருவாகி இருந்த ஜென்டில்மேன் படத்திற்கு அந்த சமயத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வடிவேலுக்காக எழுதிய கதையில் நடித்து ஹிட் கொடுத்த விஜய்!

இந்த படத்தில் நாயகனாக நடிக்க இருந்தது நடிகர் கமல் தானாம். இயக்குனர் சங்கரின் முதல் சாய்ஸ் கமல்ஹாசன் தான் .ஆனால் சில காரணங்களால் கமலால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போகவே ஆக்சன் கிங் அர்ஜூன் இப்படத்தில் ஒப்பந்தமானார். அவரும் நன்றாகவே நடித்திருப்பார். அந்த கேரக்டரும் அர்ஜூனுக்கு நன்றாகவே பொருந்தியிருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.