Connect with us

ரசிகர்களை கண்ணீர் விடவைத்த கமல் !! சர்ப்ரைஸ் விசிட்டா எங்க எப்போ ??..

vik kam

பொழுதுபோக்கு

ரசிகர்களை கண்ணீர் விடவைத்த கமல் !! சர்ப்ரைஸ் விசிட்டா எங்க எப்போ ??..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

kama vik

விக்ரம் படத்தின் இசைவெளியிட்டு விழா மற்றும் டிரைலர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த திரைப்படம் ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக கமல் படம் வராத நிலையில் தற்போழுது நடிகர் கமல்ஹாசனை திரையில் காணப்போகிறோம் என்ற உற்சாகத்தில் இருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்று உள்ளது.

ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால் படத்தின் புரமோஷன் பணியை படக்குழு வேகமாக முடித்துவருகிறது . அந்தவகையில் ‘சோனி மியூசிக்’ சார்பில் ஃபேன் பாய் மொமென்ட் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

su

யூடியூபை கலக்கிய ‘வீட்ல விசேஷம்’ டிரைலர் !! இதுவரை எத்தனை மில்லியன் பார்வையாளர்கள் தெரியுமா ??

அந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள் சிலர்,அதில் அவரை பிடிப்பதற்கான காரணங்கள் குறித்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். அப்போது யாரும் சற்று எதிர்பார்க்காத வகையில், கமல் அவர்களுக்கு பின்னால் வந்து நின்று சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

கமலை பார்த்த அதிர்ச்சியில் ரசிகர்கள் கண்கலங்கி நின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top