கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கமல் இணைய வாய்ப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் மே முதல் வாரத்தில் கர்நாடகா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்ய உள்ள அவர், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

முன்னதாக, கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கோவை மற்றும் சேலத்தில் அக்கட்சியின் தலைவர்களுடன் கமல் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் முதல் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் அறிமுகம் !

மேலும் கூட்டத்தில், கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல், கட்சி கூட்டணி, பல்வேறு உள்கட்சி விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கட்சியின் தற்போதைய செயற்பாடுகள், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விபரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.