Entertainment
பாலாஜியை தட்டி கேட்க போகிறாராம் கமல்: கலாய்க்கும் நெட்டிசன்கள்!
நேற்றும் இன்றும் பிக்பாஸ் வீட்டில் ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் கடுமையாக மோதி வருகின்றனர் என்பதும் இருவருக்குமிடையே எப்போது கைகலப்பு ஏற்படும் என்ற பயம் தான் அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் இருக்கின்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் பாலாஜியை கமல்ஹாசன் இன்று தட்டிக் கேட்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு முன்பும் அன்புக் குரூப்பினர் எல்லை மீறிய போதும் இதே போன்று கோரிக்கை விடுத்தனர். கமல்ஹாசனும் மிகவும் ஆவேசமாக தட்டிக் கேட்பதாக புரமோ வீடியோவில் கூறினார்
ஆனால் நிகழ்ச்சியின் போது மிகவும் மென்மையாக நடந்து கொண்டது பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை நடத்த லாயக்கு இல்லை என்றே பலரும் கண்டிப்புடன் அவரை கலாய்த்தனர்.
இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள வீடியோவில் பாலாஜியை தட்டி கேட்பேன் என்று கமல் கூறுகிறார். அவர் தட்டிக் கேட்கும் லட்சணம் தான் எங்களுக்கு தெரியுமே என்று நம்பிக்கை இல்லாமல் பிக்பாஸ் ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்
இன்றைய நிகழ்ச்சியிலும் பாலாஜி, ரம்யாவை கமல்ஹாசன் தட்டிக் கேட்க வில்லை என்றால் பார்வையாளர்களின் கண்டனங்கள் கமல் மீதுதான் திரும்பும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது
