மக்களை கைதட்ட வைத்து அசீமை ஏமாற்றிய கமல்ஹாசன்!

மக்களை கைதட்ட வைத்து அசீமை கமலஹாசன் ஏமாற்றிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பேசும்போது அவர்களது கருத்து நன்றாக இருந்தால் பார்வையாளர்கள் கை தட்டுவார்கள் என்பது தெரிந்ததே. இதனை வைத்து நமக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதையும் போட்டியாளர்கள் புரிந்துகொள்வார்கள்.

biggboss kamal1 இந்த நிலையில் கமல்ஹாசன் பார்வையாளர்களிடம் போட்டியாளர்கள் பேசும்போது நீங்கள் கை தட்ட வேண்டாம், கைதட்டினால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் தவறாக பேசும் போது கை தட்டுங்கள், அவர்கள் குழப்பம் அடைவார்கள் என்று கமலஹாசன் கூறுகிறார்.

இதனை அடுத்து அசீம் பேச வரும் போது திடீரென மக்கள் கை தட்டுகின்றனர். உடனே அசீம் தனக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறார். ஆனால் சக போட்டியாளர்கள் அசீமுக்கு எப்படி இவ்வளவு ஆதரவு மக்கள் மத்தியில் ஏற்பட்டது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

biggboss kamal2இந்த குழப்பம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே கமலஹாசன் ஏற்கனவே பார்வையாளர்களிடம் சொல்லி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.